வெள்ளி, 21 ஜூலை, 2017

தமிழக அரசின் இணையதளத்தில் அமைச்சரின் தொடர்பு விவரங்கள் மாயம்! July 21, 2017

தமிழக அரசின் இணையதளத்தில் அமைச்சரின் தொடர்பு விவரங்கள் மாயம்!


ஊழல் புகார்களை மின்னணு முறையில் பதிவு செய்யுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் அறிவித்த நிலையில் , தமிழக அரசின் இணையதளத்தில் முதல் அமைச்சர், அமைச்சர்களின் தொடர்பு விவரங்கள் மாயமாகியுள்ளது. 

நடிகர் கமல்ஹாசனுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அனுப்ப ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் இருதினங்களுக்கு முன்பு கமல்ஹாசன் அறிவுறுத்தினார். 

இந்நிலையில், அந்த இணையதளத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின்  இ–மெயில் முகவரி என அனைத்தும் மாயமாகியுள்ளன. அவர்களின் சொந்த ஊர், தொழில், சென்னை முகவரி, தொலைபேசி எண், வெளியூர் தொலைபேசி எண், இணையதள முகவரி என அனைத்து தொலை தொடர்பு அம்சங்களுக்கான இடம் வெற்றிடமாக  உள்ளது.

அரசு இணையதள பக்கத்தில் அவர்கள் வகிக்கும் துறை சம்பந்தப்பட்ட தகவல் மட்டுமே உள்ளது. ஆனால் தமிழகத்தின் 233 எம்.எல்.ஏ.க்களின் செல்போன் எண், புகைப்படம், தொகுதி, இ–மெயில் ஆகிய விவரங்கள் தொடர்ந்து இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts: