திங்கள், 3 ஜூலை, 2017

கல்பாக்கத்தில் பயன்பாட்டுக்கு வர இருக்கும் நவீன அணு உலை! July 03, 2017

கல்பாக்கத்தில் பயன்பாட்டுக்கு வர இருக்கும் நவீன அணு உலை!


கல்பாக்கத்தில், நவீன தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக அணு உலை நடப்பாண்டில் பயன்பாட்டிற்கு வரும் என இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டு வரும் வணிக ரீதியிலான முதல் அதிவேக அணு உலைக்கு ரஷ்யா தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. எனினும், ரஷ்யாவில் பயன்பாட்டில் உள்ள அதிவேக அணு உலைகளைக் காட்டிலும், கல்பாக்கத்தில் உள்ள அணு உலை தனித்துவமானது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வழக்கமான அணு உலைகளை விட, அதிவேக அணு உலையில் 70 சதவிகிதம் வரை கூடுதல் மின்சாரம் கிடைக்கும் என்பதால், அணுக் கழிவுகளின் வெளியேற்றமும் குறையும் என்பது, அதிவேக அணு உலைகளின் கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.