செவ்வாய், 4 ஜூலை, 2017

கதிராமங்கலத்தில் மாணவர்களும் பொதுமக்களும் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் July 04, 2017


கதிராமங்கலத்தில் மாணவர்களும் பொதுமக்களும் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்

கதிராமங்கலத்தில் இருந்து ஒஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவியர்களும் பொதுமக்களும் வாயில் கருப்பு துணி கட்டி பேரணியாகச் சென்றனர். 

கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற நடத்தப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 10 பேரையும் விடுவிக்க வேண்டும்,  காவல்துறையினர் முற்றிலுமாக கதிராமங்கலத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.  

கதிராமங்கலம் குத்தாலம் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் நேற்று தங்கள் வகுப்புகளை புறக்கணித்து வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கதிராமங்கலத்தில் ஊர்வலம் நடத்தினர்.  கருப்பட்டி தெருவில் உள்ள சாலையில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை அவர்கள் தெரிவித்தனர். இதில் ஏராளமான பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related Posts: