செவ்வாய், 4 ஜூலை, 2017

கதிராமங்கல மக்களை சந்திக்க மறுத்த ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் July 04, 2017




கதிராமங்கலத்தில் போராடும் மக்களை சந்திக்க மறுத்து, மோசமான நிகழ்வுக்கு வித்திட்ட மாவட்ட ஆட்சியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கதிராமங்கலத்தில் போலீஸார் போட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் உடனடியாக ரத்து செய்து, சிறையில் உள்ள பொதுமக்களையும், விவசாயிகளையும் விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். 

கதிராமங்கலத்தில் சுமூக நிலை நிலவுவதாக முதலமைச்சர் கூறி இருப்பது, அங்கு நடைபெற்ற போலீஸ் அராஜகத்தை மறைக்கும் முயற்சி என மு.க. ஸ்டாலின் சாடி உள்ளார். தீ வைப்பது, இப்போதைக்கு தமிழக காவல் துறையில் உள்ள சில போலீஸ் அதிகாரிகளின் டிரென்ட் ஆகி விட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். 

தீ வைப்பில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளை கண்டுபிடித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

Related Posts: