புதுவையில் தமக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த வன்முறை குறித்து நீதி விசாரணை நடத்துமாறு முதலமைச்சர் நாராயண சாமிக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பரிந்துரைத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி முழு அடைப்பு போராட்டத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் அறிக்கைக்கும், ஊடகங்கள், நாளிதழ்களில் வெளி வந்த தகவல்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாகக் கூறினார். இதுதொடர்பாக நீதித்துறை நடுவர் அளவிலான நீதி விசாரணைக்கு உத்தரவிட முதல்வருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
முழு அடைப்பின் போது பதிவான வன்முறை சம்பவங்கள், பதிவாகாத வன் செயல்கள் குறித்தும் வன்முறைகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்தும் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கிரண்பேடி தெரிவித்தார். விசாரணையை முடித்து 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.