செவ்வாய், 11 ஜூலை, 2017

பில்கிஸ் பானு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி! July 11, 2017

பில்கிஸ் பானு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி!


பில்கிஸ் பானு வழக்கில் தாங்கள் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி ஐபிஎஸ் அதிகாரி உட்பட நான்கு காவல்துறையினரும் இரண்டு மருத்துவர்களும் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. 

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்கிற கர்ப்பிணி பெண்ணை 11 பேர் வன்புணர்வு செய்துள்ளனர். அத்துடன் குடும்பத்தை சேர்ந்த 14 பேரை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இந்த தகவலை விசாரித்த காவல்துறையினரும் பிரேத பரிசோதனையில் ஈடுபட்ட மருத்துவர்களும் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டு தடையத்தை அளித்ததாகக் கூறப்பட்டது. இவ்வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் காவலர்களையும் மருத்துவர்களையும் குற்றவாளி என அறிவித்திருந்தது. 

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Related Posts: