செவ்வாய், 11 ஜூலை, 2017

ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி! July 11, 2017

ரபேல் நடால் அதிர்ச்சித் தோல்வி!


விம்பிள்டன் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு சுவிசர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் முன்னேறியுள்ளார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில், பல்கேரியாவின் டிமிட்ரோவ் கிரிகோருடன் மோதிய ஃபெடரர், 6-4, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். இதன் மூலம் விம்பிள்டன் தொடரில் 15 முறை காலிறுதிக்கு முன்னேறிய ஒரே வீரர் என்ற தனிப் பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இதேபோல் மற்றொரு 4ம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், லக்சம்பார்க் வீரர் கில்ஸ் முல்லருடன் மோதினார். நீண்ட நேரம் நடைபெற்ற இந்தப் போட்டியில், மூன்று இரண்டு என்ற செட் கணக்கில் நடால் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இதன் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே விம்பிள்டன் தொடரில் இருந்து தொடர்ந்து 6வது ஆண்டாக நடால் வெளியேறி இருக்கிறார்.

Related Posts: