சென்னை மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் போரூர் ஏரியிலிருந்து குடிநீர் வழங்குவதற்காக தற்காலிகமாக சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியால் சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களான புழல், செம்மரம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் வறண்டு விட்டன. இந்நிலையில் மாநகரின் கோடைகால நீர் தேவையை பூர்த்தி செய்ய சென்னை மாநகராட்சியும், குடிநீர் வாரியமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை போரூர் ஏரியில் உள்ள தண்ணீரை சுத்திகரித்து அதனை பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக மாற்றும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தினை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஏற்கனவே நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், நெய்வேலி சுரங்கத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள் மூலம் பெறப்படும் தண்ணீர் வீராணம் மூலமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போரூர் ஏரியில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலமாக ஆலந்தூர், வளசரவாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இது போன்ற திட்டங்களை தாங்கள் வரவேற்பதாகவும் நீர் ஆதாரங்கள் இருக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்றும் போரூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு இது போன்ற திட்டங்களை தொடங்குவது வரவேற்கத்தக்கது என்றாலும் இது காலம் தாழ்த்திய செயல் என்கின்றனர் நீர்வளத்தை பாதுகாக்க கோரிக்கை வைத்து வரும் அறப்போர் இயக்கத்தினர். போரூர் ஏரியை முறையாக தூர்வாரியிருந்தால் நாள் ஒன்றுக்கு 4 மில்லியன் லிட்டருக்கு பதிலாக 7 மில்லியன் லிட்டர் தண்ணீர் கூட எடுக்க முடியும் எனவும் அறப்போர் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்
போரூர் ஏரி மட்டுமல்லாது கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளையும் முறையாக தூர்வாரி பராமரிக்கப்பட்டால் பிற்காலத்தில் வரக்கூடிய தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க
முடியும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.