வியாழன், 13 ஜூலை, 2017

நுகர்வோர் பண வீக்க விகிதம் குறைவு! July 13, 2017

நுகர்வோர் பண வீக்க விகிதம் குறைவு!


நாட்டின் நுகர்வோர் பண வீக்க விகிதம் வரலாறு காணாத அளவிற்கு 1.54 ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் 2.18 ஆக இருந்தது. 

உணவுப் பொருட்களில் ஏற்பட்ட விலை குறைவு காரணமாகவே நுகர்வோர் பண வீக்க விகிதம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கான 4 சதவீதத்தை விட குறைவு ஆகும். அதீத பண வீக்க குறைவு காரணாக ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஜூன் மாத இறுதியில் நுகர்வோர் பண வீக்க விகிதம் 1.7 சதமாக மேலும் குறையக் கூடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் தொழிற்துறை உற்பத்தியும் கடந்த மே மாதத்தில் 1.7 சதவீதமாக குறைந்துள்ளது.