வியாழன், 13 ஜூலை, 2017

அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி வருகிறது இந்தியா! July 13, 2017




சீனாவை சமாளிக்க இந்தியா அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி வருவதாக அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக இந்தியா-சீன இடையே எல்லை பிரச்சனை நிலவிவருகிறது. இந்தியா - சீனா எல்லையில் இருநாடுகளின் படைகளும் குவிக்கப்பட்டு, 3வது வாரமாக தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நீடித்துவருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள After Midnight என்ற பத்திரிக்கையில் Hans M Kristensen மற்றும் Robert S Norris எழுதியுள்ள கட்டுரையில் தென் இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் மூலம் சீனாவை தாக்க  திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 

பாகிஸ்தான் நாட்டிற்காக 150 முதல் 200 அணு ஆயுத தளவாடங்களை தயாரிக்க திட்டமிடப்பட்டதாகவும், ஆனால் தற்போது சீனாவை எதிர்கொள்ளும் விதமாக இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும், அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா தனது அணுசக்தி ஆயுதங்களை நவீனமயமாக்கிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட நிபுணர்கள் , பல புதிய அணு ஆயுத அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Related Posts: