செவ்வாய், 18 ஜூலை, 2017

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவி! July 17, 2017




ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  

சேலம் வீராணம் அருகே உள்ள பள்ளிக்கூடதாதனூரை சேர்ந்த கல்லூரி மாணவி  வளர்மதி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, கடந்த சில நாட்களுக்கு முன்  அரசு மகளிர் கலைக் கல்லூரி முன்பாக ஜெயந்தி என்பவருடன் இணைந்து துண்டு பிரசுரம் வினியோகித்தார். 

அவர்கள் இருவரையும் கன்னங்குறிச்சி காவல் துறையினர்  கைது செய்து, சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் ஜெயந்தி விடுவிக்கப்பட்டார். சேலம் பெண்கள் சிறையில் வளர்மதி அடைக்கப்பட்டார். அவர் மீது சிவகங்கை, கோவை, சேலம் உள்பட பல்வேறு இடங்களில் 6 வழக்குகள் உள்ளன. 

இதனால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையாளர் சஞ்சய்குமாருக்கு காவல் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். பரிந்துரையை ஏற்ற ஆணையாளர், வளர்மதியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை வைக்க உத்தரவிட்டார். இதன்படி வளர்மதி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அதனைத்தொடர்ந்து, கோவை பெண்கள் சிறையில் வளர்மதி அடைக்கப்பட்டார்.

Related Posts: