செவ்வாய், 18 ஜூலை, 2017

சுங்கச்சாவடியில் இனி கட்டணம் செலுத்த தேவையில்லை! July 18, 2017




சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை என தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. 

சாலையில் பயணம் செய்யும்போது ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ பயணம் செய்யும்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியில் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணமும் மக்கள் பயணிக்கும் வாகனத்தை பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த வழக்கறிஞர் ஹரி ஓம் ஜிண்டால் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு இருந்தார். அதற்கு விளக்கமளித்த அரசு, சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் கட்டணம் வரி இல்லை என்றும் மாறாக அது சேவை கட்டணமாகவே வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் சுங்கச்சாவடியில் மூன்று நிமிடங்களுக்கு மேல் வாகனத்தில் காத்திருந்தால் அவர்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளது. 

Related Posts: