செவ்வாய், 18 ஜூலை, 2017

ரூபாவின் பணியிட மாற்றத்தை கண்டித்து சிறைக் கைதிகள் உண்ணாவிரதம்! July 18, 2017

ரூபாவின் பணியிட மாற்றத்தை கண்டித்து சிறைக் கைதிகள் உண்ணாவிரதம்!


கர்நாடக சிறைத் துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பெங்களூரு பரப்பன அக்கரஹார சிறையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, அதிகாரிகள் மீது டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். 
இந்த நிலையில், அவர் சிறைத்துறையில் இருந்து திடீரென போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத் துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, பெங்களூரில் 200-க்கும் அதிகமான கைதிகள் சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

காவல்துறை உயர் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு சிறைக் கைதிகள் உண்ணாவிரதம் இருப்பது கர்நாடக அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Related Posts: