அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவிற்கு பரப்பன அக்ரஹார சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு இருப்பதாக குற்றம் சுமத்திய கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா கர்நாடக அரசால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் டிஐஜி ரூபாவின் பணியிட மாற்றத்தை அமமநில எடியூரப்பா கண்டித்துள்ளார். ஆனால் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் நியாயமாகவும் செயல்படும் காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரேஷ்தா தாக்கூர் (உத்தரப்பிரதேசம்)
அரசு உத்தரவுகளை செயல்படுத்தவிடாமல் பிரச்சனை செய்த பாஜக அரசியல் பிரமுகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உத்தரப்பிரதேச பெண் காவல் அதிகாரி ஸ்ரேஷ்தா தாக்கூர் கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி ஸ்ரேஷ்தா பணியில் இருக்கும்போது ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த பிரமோத் குமார் என்ற நபருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். அதற்கு பிரமோத் குமார் தான் பாஜக கட்சியை கட்சியை சார்ந்தவர் என்றும் அவருடைய மனைவியும் ஜிலா பஞ்சாயத்தில் உறுப்பினராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஸ்ரேஷ்தா சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதற்காக உத்தரப்பிரதேச காவல்துறை அவரை ஜூலை மாதம் 1ம் தேதி பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது.
2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதட்டமான இடமாக அறிவிக்கப்பட்டுள்ள இடத்தில் சட்ட விரோதமாக சில பொருட்களை கடத்திய சிலரை காவல் அதிகாரி லூவ் குமார் கைது செய்தார். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பாஜகவை சார்ந்தவர்கள். இவர்களில் பாஜக எம்.பி. ராகவ் லக்கன்பால் என்பவரும் அடக்கம். மேலும் பாஜக நடத்திய பேரணியில் வன்முறையில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களையும் லுவ் குமார் கைது செய்தார். இதனால் பாஜக தலைவர்கள் நொய்டாவிற்கு பணிமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
அசாம் மாநிலத்தில் 2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைப்பெற்ற கலவரத்தை ஜோடிக்கப்பட்ட செயல் என குற்றம்சாட்டிய சி.ஆர்.பி.எஃப். ஐஜி ரஜினிஷ் ராய் என்பவரையும் ஆந்திரபிரதேசத்திற்கு பணிமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராகவும் ஆளும் கட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் கருத்தோ சட்டப்படியான நடவடிகையோ எடுக்கும் காவல்துறை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் என அனைவரும் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்படுவது வாடிக்கையாகிவருகிறது.