திங்கள், 17 ஜூலை, 2017

பச்சையப்பன் கல்லூரில் 65 மாணவர்கள் அதிரடியாக இடைநீக்கம்! July 17, 2017

பச்சையப்பன் கல்லூரில் 65 மாணவர்கள் அதிரடியாக இடைநீக்கம்!


சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 65 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

கல்லூரிக்கு சரியான நேரத்தில் வராதவர்கள், வகுப்பை புறக்கணித்து வெளியே சென்றோர், கல்லூரி விதிகளை சரிவர கடைபிடிக்காதோர் என ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட 65 மாணவர்களை, இடைநீக்கம் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதில், முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு 24ஆம் தேதியும், 2ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு 25ஆம் தேதியும் ஆசிரியர் குழு சார்பில் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வர வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related Posts: