செவ்வாய், 18 ஜூலை, 2017

தமிழக அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு! July 17, 2017

தமிழக அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு!


தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 

இதுதொடர்பாக சிபிஎஸ்இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டது.  இதனையடுத்து தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த மனுவில், 85 சதவீத உள்ஒதுக்கீடு என்பது, கொள்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்பதால் அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்திதான் அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்றும், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 

இந்த மனு விரைவில் விசாரணைக்கு உள்ளது. இந்நிலையில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் தமிழக அரசு மேல் முறையீட்டு மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என சி.பி.எஸ்.இ மாணவர்கள் சாய் சச்சின், தார்னிஷ் குமார் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதே போல் இந்த வழக்கில்  தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி மாநில பாடத்திட்டத்தின் வழியில் படித்த மாணவர்களும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Posts: