வெள்ளி, 21 ஜூலை, 2017

ரஜினி, கமல் மீது நல்லக்கண்ணு குற்றச்சாட்டு! July 20, 2017

ரஜினி, கமல் மீது நல்லக்கண்ணு குற்றச்சாட்டு!


ரஜினி, கமல் ஆகியோர் வெளியிடும் அரசியல் கருத்துக்கள், காவிரி, மீத்தேன் எதிர்ப்பு போன்ற பிரதானப் பிரச்னைகளில் இருந்து பொதுமக்களை திசை திருப்புவதாக கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு புகார் தெரிவித்துள்ளார். 

திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், அரியமங்கலம் முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள், கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது தவறில்லை என்றும், ஆனால் தற்போது அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளால், தமிழகத்தின் பிரதான பிரச்னைகள் திசை திருப்பப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.