வியாழன், 20 ஜூலை, 2017

தமிழக அரசின் வருவாய் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை! July 20, 2017

 தமிழக அரசின் வருவாய் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாக மத்திய தணிக்கை குழுவின் அறிக்கை!


தமிழக அரசின் வருவாய் வளர்ச்சி விகிதம் 5.38 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய தணிக்கை குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் 2016-ம் ஆண்டு மார்ச் வரையிலான அறிக்கை குறித்து தலைமைப் பொது கணக்காய்வாளர் தேவிகா நாயர் சென்னையில் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இழப்பு 12 ஆயிரத்து 756 கோடியே 59 லட்சம் என்றும், அரசு போக்குவரத்துக் கழகத்தால் ஏற்பட்ட இழப்பு 2 ஆயிரத்து 600 கோடியே 25 லட்சம் என்றும் தெரிவித்தார்.

மேலும் பொதுத்துறை நிறுவனங்களால் ஏற்பட்ட இழப்பில் அதிக பங்களிப்பை இந்த இரண்டு நிறுவனங்கள் தான் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல், மாநில அரசின் வருவாய் வரவு ஒரு லட்சத்து 29 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் வருவாய் வளர்ச்சி விகிதம் 5.38 சதவீதம் ஆக சரிந்துள்ளதாகவும் தேவிகா நாயர் தெரிவித்தார்.