திங்கள், 24 ஜூலை, 2017

தமிழகத்தில் முதன்முறையாக அன்புச்சுவர் திட்டம் நெல்லையில் தொடக்கம் July 24, 2017

தமிழகத்தில் முதன்முறையாக அன்புச்சுவர் திட்டம் நெல்லையில் தொடக்கம்


நமக்கு தேவையற்ற பொருட்களை, தேவையுள்ளவர்களுக்கு கொடுத்து உதவும் வகையில் நெல்லை மாவட்டத்தில் அன்புச்சுவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் முதல்முறையாக அன்புச்சுவர் என்ற புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் பொதுமக்கள் தங்களிடம் தேவைக்கு அதிகமாக உள்ள ஆடைகள், புத்தகங்கள், காலணிகள், உள்ளிட்டவற்றை தேவையுள்ளவர்களுக்கு கொடுத்துதவலாம். 

பொதுமக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். தாமிரபரணி தூய்மைப் படுத்தும் திட்டம், விளம்பரம் இல்லாத அரசு சுவர்கள் என பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கடந்த 2 மாதத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்திட்டமும் வரவேற்பை பெறும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts: