சனி, 1 ஜனவரி, 2022

இளம் பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 உடல்நலப் பிரச்சினைகள் என்ன?

 பெண்களின் உடல், மன மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. திறம்பட நோயறிதல் மற்றும் சிகிச்சையை விரைவில் பெற, ஒவ்வொரு பெண்ணும் தனது ஹார்மோன் ஆரோக்கியத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்று மும்பை கோகிலாபென் அம்பானி மருத்துவமனையின் மூத்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் வைஷாலி ஜோஷி கூறினார்.

நிபுணரின் கூற்றுப்படி, இளம் பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் சில பொதுவான பிரச்சினைகள், ’வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு இல்லாமையால்’ உருவாகின்றன – இது சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் திறம்பட நிர்வகிக்கலாம் என்று அவர் கூறினார்.

அத்தகைய சில சிக்கல்கள்:

பிசிஓஎஸ் அல்லது பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்

பிசிஓஎஸ் என்பது ஒரு வாழ்க்கை முறை நோய், இது முறையற்ற மாதவிடாய், குறைவான மாதவிடாய் ஓட்டம், முகப்பரு, அதிகப்படியான உடல் முடி, எடை அதிகரிப்பு, சருமம் கருமையாகுதல், உடன் பிசிஓடி (PCOD) மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பலவற்றுக்கு வழிவகுக்கும்.

“இது ஒரு அமைதியான தொற்றுநோய். குழந்தை பிறக்கும் வயதில் உள்ள ஐந்தில் ஒரு பெண், உடற்பயிற்சியின்மை மற்றும் அதிக கலோரி கொண்ட துரித உணவை உட்கொள்வதால் பிசிஓஎஸ் (PCOS) நோயால் பாதிக்கப்படுகிறார்,” என்று அவர் குறிப்பிட்டார்.

திட்டமிடப்படாத கர்ப்பங்கள்

இது பெரும்பாலும் விழிப்புணர்வு இல்லாமை, கருத்தடை மற்றும் குடும்பக் கட்டுப்பாடு கிளினிக்குகளை அணுக முடியாதது, ரகசிய சேவைகள் கிடைக்காமை அல்லது எளிய அறியாமை ஆகியவற்றால் ஏற்படுகிறது.

தொழில் மற்றும் தாய்மை அனுபவத்திற்கும், கர்ப்ப கால இடைவெளிக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்த, கர்ப்பங்களை திட்டமிடுவதை பாதிக்கலாம். “எப்போதாவது, இளம், திருமணமாகாத பெண்கள் சுரண்டப்படலாம் மற்றும் அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு நடைமுறைகளால் தவறாக வழிநடத்தப்படலாம்,” என்று டாக்டர் ஜோஷி கூறினார்.

பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (STI)

தடையற்ற (ஆணுறை) கருத்தடைகள் இல்லாத பாதுகாப்பற்ற பாலியல் நடைமுறைகள், பாலியல் நடத்தைகளின் சமூக விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதில் மாற்றங்கள், குறிப்பாக திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு, பலபேருடன் பாலியல் உறவு போன்ற காரணங்களால், ஆரோக்கியமான பெண்கள் பாலியல் ரீதியான தொற்று நோய்களுக்கு ஆளாகுகிறார்கள். “யோனி உடலுறவின் போது மட்டுமல்ல, வாய்வழி மற்றும் பிற உடலுறவின் போதும் தடை முறையைப் பயன்படுத்துவது முக்கியம்” என்று டாக்டர் ஜோஷி கூறினார்.

எக்டோபிக் கர்ப்பம்

இது கருப்பை அல்லது கருப்பைக்கு வெளியே ஏற்படும் கர்ப்பம். ஃபலோபியன் குழாய்கள், அதைத் தொடர்ந்து முந்தைய கருப்பை சிசேரியன் பிரிவு வடு ஆகியன மிகவும் பொதுவான தளங்கள். “வெளிப்படையான சிகிச்சை அளிக்கப்படாத பாலியல் நோய் STI, குறிப்பாக க்ளிமாடியா (Chlymadia) மற்றும் அதிக சிசேரியன் பிரசவங்கள் காரணமாக இந்த நிகழ்வு அதிகரித்துள்ளது” என்று டாக்டர் ஜோஷி கூறினார்.

கருவுறாமை அல்லது கருத்தரிப்பதில் சிரமம்

ஓவல்யூஷன் என்பது, கருப்பையில் இருந்து முதிர்ந்த முட்டை வெளியிடப்படும் செயல்முறை. அது வெளியான பிறகு, முட்டை ஃபலோபியன் குழாயின் கீழே நகர்ந்து 12 முதல் 24 மணி நேரம் வரை அங்கேயே இருக்கும், அங்கு அது கருவுறலாம். ஆனால் பிசிஓஎஸ் காரணமாக முட்டை உற்பத்தி செய்வதில் சிரமம் நிகழும். க்ளிமாடியா அல்லது முந்தைய அறுவை சிகிச்சைகள் போன்ற பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று காரணமாக பொதுவாக குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. மேலும் தொழில் வாழ்க்கையில் லட்சியத்தை எட்டியபிறகு, 35 வயதுக்கு மேல், முதல் கர்ப்பத்தைத் திட்டமிடும் போது,” முதிர்ந்த வயதின் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/lifestyle/five-health-issues-that-every-woman-should-must-know-390888/