ஒமிக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கிலே நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி ஜனவரி 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு உரையாற்றுகிறார்.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருந்தார். தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று சற்று கடுமையாக்கப்பட்டது. மேலும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால், கலைவாணர் அரங்கிலேயே தமிழக சட்டப்பேரவை கூட உள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-session-again-at-kalaivanar-arangam-391285/