உத்தரப் பிரதேசத்தில் 13 வயது தலித் சிறுமி கடத்தப்பட்டு அவர் போபாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து தப்பியபின் அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் மீது புகார் அளிக்க காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல் நிலைய அதிகாரியால் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது தலித் சிறுமி கடத்தப்பட்டு, மத்தியப் பிரதேசத்தின் போபாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கே அவர் அடைத்து வைக்கப்பட்டு நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி, காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றபோது, காவல் நிலைய அதிகாரியால் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை சைல்ட் லைன் குழுவிடம் கூறியதை அடுத்து, காவல்துறை, அந்த காவல் நிலைய அதிகாரி மற்றும் அந்த சிறுமியின் அத்தை உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், சிறுமியை வன்புணர்வு செய்த காவல் நிலைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.