செவ்வாய், 3 மே, 2022

தடுப்பூசி போட யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 

மத்திய அரசின் தற்போதைய தடுப்பூசி கொள்கை தன்னிச்சையானது அல்ல என கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், எந்தவொரு தனிநபரையும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி போட கூடாது எனத் தீர்ப்பளித்துள்ளது.

சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வர அனுமதியில்லை என்கிற கட்டுப்பாட்டை விதித்துள்ளன. இது அரசியல் சாசன உரிமைகளுக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் இன்று, இவ்வழக்குகளுக்கு நீதிபதி எல் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

அவர் கூறியதாவது, தடுப்பூசியின் நன்மைகள் குறித்த நிபுணர்களின் ஒருமித்த கருத்துகளைப் பிரதிபலிக்கும் வகையில், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட் ஆவணங்கள் உள்ளன.

மத்திய அரசின் தற்போதைய தடுப்பூசி கொள்ளை தொடர்பான பரிசீலினைகள் சமர்ப்பிக்கப்ப்டடுள்ளது. அதில், இது நியாயமற்றது அல்லது வெளிப்படையாக தன்னிச்சையானது என்று கூற முடியாத அளவில் இருப்பதால் நீதிமன்றம் திருப்தி அடைகிறது.

சில நிபந்தனைகளை உருவாக்கி, அதன் கொள்கைகளை வகுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அரசியல் சாசனப் பிரிவு 21-ன் கீழ், தடுப்பூசியை செலுத்திக் கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த முடியாது

தடுப்பூசி கட்டாயம் என்பது தொடர்பா, மத்திய அரசோ அல்லது மாநிலங்களோ தரவுகள் எதுவும் சமர்ப்பிக்கவில்லை.

ஒருவேளை கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தால், அவற்றை நீக்கிடவேண்டும். பொது இடங்களுக்கு வரக்கூடியவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவோ, அறிவிப்பாணையோ வெளியிட்டிருந்தால, அவற்றை திரும்பப் பெற வேண்டும்.

மேலும், கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் எதிர்மறை நிகழ்வுகளை வெளிப்படையாக மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ஜேக்கப் புலியேலின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இவர் தடுப்பூசிகள் குறித்த மையத்திற்கு ஆலோசனை வழங்கி வரும் குழந்தை மருத்துவர் ஆவர்.

source https://tamil.indianexpress.com/india/vaccine-not-mandatory-supreme-court-448694/