வியாழன், 6 அக்டோபர், 2022

பிரிவினை சக்திகளை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் – திருமாவளவன் எம்.பி.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் ‘பிரிவினை சக்திகளை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்’ என பேசினார்.

தெலங்கானா மாநில முதலமைச்சரும் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் இன்று தனது கட்சியைத் தேசிய கட்சியாக, பாரத் ராஷ்டிரிய சமிதி என மாற்றினார். இதற்கான நிகழ்ச்சி தெலுங்கானாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் எம்.பி., “ இது தனக்குக் கிடைத்த பெருமை எனவும் தம்மை அழைத்த சந்திர சேகரராவுக்கு நன்றி என கூறினார். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எனும் காட்சியிலிருந்து பாரத் ராஷ்டிரிய சமிதியாக உருமாற்றம் அடைந்துள்ளது தெலங்கானா மக்களுக்காகத் தனி மாநிலத்தைச் சாதித்துக் காட்டிய சந்திர சேகரராவ், தற்போது இந்திய மக்களுக்காகச் சாதிக்க உள்ளார்.

 

இந்தியாவின் ஜனநாயகத்தை மற்றும் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் அவரின் லட்சியத்தை நான் பாராட்டுகிறேன். ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து, இந்தியாவில் பிரிவினை தூண்டும் சக்திகளை வீழ்த்த வேண்டும். தெலங்கானா மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்தச் செய்துவரும் திட்டங்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்” எனப் பேசினார்.

முன்னதாக, இன்று காலை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை அவரது இல்லமான பிரகதி பவனில் தொல்.திருமாவளவன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து அவருடன் காலை உணவு உட்கொண்டார். அதைத்தொடர்ந்து கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி உடனும் அவர் சந்தித்துப் பேசினார்.

 




source https://news7tamil.live/democratic-forces-must-unite-to-defeat-divisive-forces-thirumavalavan-mp.html