06.10.2022 மதுரையில் தடையை தாண்டி பயங்கரவாத சட்டங்களுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிரான மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்..
UAPA சட்டத்தையும்,NIA அமைப்பையும் பயன் படுத்தி ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்க முயலும் மத்திய பாஜக அரசையும்,தமிழ் நாட்டில் இணை ஆட்சி செய்ய முயலும் ஆளுனரையும் கண்டித்து மதுரை தமுக்கம் மைதானத்தில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மமக பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது MLA தலைமையில் நடைபெற்றது.
தமுமுக மமக தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டு NIA,UAPA மற்றும் ஆளுனருக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்.
அடக்குமுறை,முன்னெச்சரிக்கை கைதுகள் வழிநெடுகிலும் இருந்த போதும் சரியான நேரத்தில் அனைத்து மாவட்ட சகோதரர்களும் திடலுக்கு வந்து ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
source https://www.facebook.com/photo?fbid=657700039051752&set=pcb.657701045718318