செவ்வாய், 3 ஜனவரி, 2023

ரூ. 49 மட்டுமே.. 1 GB டேட்டா, காலிங் வசதி.. பி.எஸ்.என்.எல்லின் இந்த திட்ட பயன் என்ன?

 2 1 2023 

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பி.எஸ்.என்.எல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆகும். பி.எஸ்.என்.எல் மத்திய அரசால் இயக்கப்படும் தொலைத்தொடர்பு நிறுவனம் ஆகும்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என பிஎஸ்என்எல் அழைக்கப்படுகிறது. இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பி.எஸ்.என்.எல் 5ஜி சேவை வழங்கப்பட உள்ளது. பி.எஸ்.என்.எல் பயனர்களுக்கு ஏற்றவாறு சிறந்த மற்றும் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை கொண்டுள்ளது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி கண்ட நிலையில் பி.எஸ்.என்.எல் அதற்கு ஈடாக பல ரீசார்ஜ் திட்டங்களை அளித்து வருகிறது. அந்தவகையில் ரூ. 49 ரீசார்ஜ் திட்டம் பயனர்களை வியக்க வைக்கிறது.

ரூ. 49 ரீசார்ஜ் திட்டம்

பி.எஸ்.என்.எல்லின் ரூ. 49 ரீசார்ஜ் திட்டத்தில் 1 ஜிபி டேட்டா, 100 நிமிடங்களுக்கான லோக்கல் மற்றும் நேஷனல் ஆடியோ கால்கள் அதாவது வாய்ஸ் கால்கள் பெறலாம். இந்த திட்டம் 15 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட அளவு டேட்டா மற்றும் காலிங் வசதி பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.


source https://tamil.indianexpress.com/technology/bsnl-rs-49-prepaid-recharge-plan-569406/