இந்து மக்களின் தர்மத்தை காப்பாற்றவும், இந்து கலாச்சாரத்தை பாதுகாக்கவும் போர் செய்ய வேண்டியிருக்கிறது என்று ஆர். எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஆர். எஸ். எஸ் மாத இதழ் ஒன்றுக்கு மோகன் பகவத் பேட்டியளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது : “ இந்த போரானது முன்பே தொடங்கிவிட்டது. வெளிநாட்டின் தாக்கங்கள் மற்றும் அவர்களின் படையெடுப்பு எதிராக நடந்தது. இது பற்றி பலர் பேசியிருக்கிறார்கள். இந்து சமூகம் விழித்துக்கொண்டுவிட்டது. போர் என்றாலே ஆக்ரோஷமாக இருப்பது இயற்கைதான்.
ஆனால் நாம் இப்போது போர் செய்யவேண்டியது வெளிநாட்டு சக்திகளிடம் இல்லை. நம்மக்குள்தான் நாம் போர் செய்ய வேண்டியிருக்கிறது. நமது இந்து தர்மத்தை. கலாச்சாரத்தை காப்பற்ற இதை நாம் செய்ய வேண்டும்.
இஸ்லாமியர்கள் பயம்கொள்ள வேண்டாம். ஆனால் உங்கள் தனியுரிமையை கைவிட்டால் மட்டுமே எங்களுடன் பயணிக்க முடியும். எல்ஜிபிடிக்யூ சமூகத்தினரை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அவர்கள் அதிகமாக குரல் எழுப்பாமல் இருக்க வேண்டும். மற்ற மனிதர்களைப்போல் வாழ்வதற்கு அவர்களுக்கும் உரிமை இருக்கிறது. தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஒன்றும் புதிதாக உருவாகவில்லை. மனிதன் தோன்றியது முதல் இருக்கிறார். நான் ஒரு வெட்னரி மருத்துவர் என்பதால் எனக்கு இதில் அனுபவம் உள்ளது. விலங்குகளிடமும் இது காணப்படுகிறது.
இதுபோல திருநங்கை சமூகத்தினரையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவர்களுக்கு தனியாக கடவுள் இருகக்கிறார்.
அன்றாடம் நடைபெறும் அரசியலில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தள்ளி இருக்கிறது. ஆனால் இந்த தேசியத்தை பாதிக்கும் அரசியல் முடிவுகள், இந்துக்களின் விருப்பங்கள் ஆகியவற்றில் எங்கள் தலையீடு இருக்கும். ” என்று அவர் கூறியுள்ளார்.
11 1 2023
source https://tamil.indianexpress.com/india/rss-mohan-bhagwat-interview-his-thoughts-574502/