வியாழன், 2 பிப்ரவரி, 2023

கனமழை எதிரொலி – 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 2 2 23

கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்திலும், மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று ஒருநாள், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உத்தரவிட்டுள்ளார்.

source

https://news7tamil.live/heavy-rain-reverberates-school-and-college-holidays-today-in-3-districts.html

Related Posts:

  • தெரிந்தது கொல்ளவும்......... Read More
  • அல்குர்ஆன் மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்த… Read More
  • அஞ்சலகத்தின் -ஒப்புகை அட்டை வரவில்லையா ஒப்புகை அட்டை வரவில்லையா..... அப்படி நமக்கு ஒப்புகை அட்டை வந்தாலும் அதில் உரிய அலுவலகத்தின் முத்திரை. அதிகாரி கையெப்பம்.தேதி இல்லையா.... அஞ்சலகத்த… Read More
  • Hadis அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவரு… Read More
  • இறால் வளர்ப்பு! - கிராம புற மக்களுக்கு ஏற்ற தொழில் நல்வருமானம் தரும் இறால் வளர்ப்பு! ஒரு ஏக்கரில் 1,650 கிலோ இறால்! 1) தாராளமாக குஞ்சுகள் கிடைக்கும்! 2) 100 நாட்களில் வருமானம்! 3) கிலோ 500 -700 ரூ… Read More