வியாழன், 15 ஜூன், 2023

இன்று மாலை கரையை கடக்கும் பிபோர்ஜோய் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!!

 15 6 23

அதிதீவிர புயலாக மாறிய பிபோர்ஜோய் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
பிபோர்ஜோய் புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து சவுராஷ்டிரா மற்றும் கட்ச், குஜராத்தின் மந்த்வி- பாகிஸ்தானின் கராச்சி அருகே  ஜக்காவ் துறைமுகம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், 6 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
போர்பந்தர், ராஜ்கோட், மொர்பி, ஜுனாகாத், சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் பகுதிகளில் அதிதீவிர மழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில்  உள்ள மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். புயலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கை தொடர்பாக முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைசச்ர் ராஜ்நாத்சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். மேலும் முப்படைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு நடத்தினார்.
இதேபோல் கட்ச் பகுதியில் நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கை பணிகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார். தயார் நிலையில் உள்ள விமானப்படையின் கருடா அவசர கால நடவடிக்கை குழுவினரையும் அவர் சந்தித்தார். தேசிய பேரிடர் மீட்புப்படையின் 15 குழுக்கள், 12 மாநில பேரிட மீட்புக்குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டுமானத்துறையின் 115 குழுக்கள், மின்சாரத்துறையின் 397 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

source https://news7tamil.live/cyclone-piborjoy-to-make-landfall-this-evening-precaution-intensified.html