சந்திரயான் – 3 நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்து திட்டமிட்டபடி பயணித்து வரும் நிலையில் இன்று இரவு 11 மணி அளவில் நிலவின் சுற்றுப்பாதையை படிப்படியாக குறைக்கும் செயல்பாடு துவங்க உள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொட்டுவிடும் தூரத்தில் தான் வெற்றி – எட்டிவிடும் தூரத்தில் தான் வானம்
என்பது போல் ஒட்டுமொத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் என்ன ஓட்டமும்
சந்திரன் -3 திட்டத்தை பற்றியே ஓடிக்கொண்டு உள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திராயன் – 3 திட்டத்தை மிகச் சிறப்பாகவும் கவனமாகவும் உருவாக்கி உள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு
நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது – இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது –
அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில்
இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போது
மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 26 ஆம் தேதி சந்திரயான் – 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5-வது முறை
வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது. அடுத்தகட்டமாக சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 1ம் தேதி புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் திட்டமிடப்பட்டது போல் தள்ளப்பட்டது. தற்போது நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குள் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. அதன்பிறகு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக (சாஃப்ட் லேண்டிங்) தரையிறக்கப்படவுள்ளது.
இந்நிலையில் நிலவின் சுற்றுப்பாதையை படிப்படியாக குறைக்கும் செயல் திட்டம்
இன்று இரவு 11 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 23ம் தேதி சந்திராயன் – 3ன் லேண்டார் கருவி நிலவில் தரையிரங்கி அதில்
இருந்து ரோவர் என்கிற ரோபார்ட் வடிவிலான செயல்பாடு பிரிந்து சென்று ஆய்வு
மேற்கொள்ளும் இந்த திட்டத்தை, இந்தியா மட்டும் அல்லாது உலகெங்கிலும் உள்ள
ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.
source https://news7tamil.live/chandrayaan-approaching-the-moon-next-move-tonight-at-11pm.html