ஞாயிறு, 15 அக்டோபர், 2017

சூப்பர் சோனிக் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு! October 15, 2017

சூப்பர் சோனிக் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு!


விமான துறையின் வளர்ச்சிக்கு முன்னோடியாக அமைந்த, ஒலியை விட வேகமாக பயணிக்கும் சூப்பர் சோனிக் விமானத்தை கண்டுபிடித்து, இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைகின்றது. 

சூப்பர் சோனிக் விமானங்களுக்கு முன்னோடியாக 1947-ல் கண்டுபிடிக்கப்பட்ட X-1 விமானங்கள், விமானத் துறையின் வரலாற்றை மாற்றி அமைத்தது. 

ஏனெனில் ஒலியை விட வேகமாக பறக்க முடியும் என்பதை கண்டறிந்த விஞ்ஞானிகள், விமானத்துறையில் அடுத்தடுத்த கண்டுபிடிப்புகளுக்கு இது ஒரு மைல்கல்லாக அமைந்தது என்று கூறுகின்றனர். ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட போது மணிக்கு வெறும் 700 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்த சூப்பர் சோனிக் விமானங்கள் அப்போது வெறும் ஆய்வுக்காக மட்டுமே பயண்படுத்தப்பட்டு வந்தது. 

பின்னர் 4,520 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் மெருகேற்றப்பட்டது. இந்த விமானத்தை வில்லியம் ஜே.பீட் என்பவர் முதன்முறையாக ஓட்டி வரலாற்றில் இடம் பிடித்தார்.

இதனை அடிப்படையாகக் கொண்டே பின்னாளில் நாசா விண்வெளிக்கு செல்லக் கூடிய ராக்கெட்டுகளை வடிவமைத்தது. சூப்பர் சோனிக் விமானங்கள் கண்டுபிடித்து இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் அதன் மீதான ஆராய்ச்சிகள் இன்றும் தொடர்கின்றன.