ஞாயிறு, 15 அக்டோபர், 2017

சக்கரங்கள் இல்லாத காரை கண்டுபிடித்து சீன இளம்பெண் அசத்தல்! October 15, 2017

சக்கரங்கள் இல்லாத காரை கண்டுபிடித்து சீன இளம்பெண் அசத்தல்!


சக்கரம் இல்லாமல் காந்த சக்தியை மட்டுமே கொண்டு இயங்கும் வகையில் சீன இளம் பெண் உருவாக்கியுள்ள காருக்கு சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

சக்கரமற்ற இந்த வாகனத்தை திருப்பாமலேயே எந்த திசையில் வேண்டுமானாலும் மாற்றி ஓட்டலாம் என்பது இதன் தனிச்சிறப்பு ஆகும். 

அதுமட்டுமின்றி ஒரு சிறிய கேபினை போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் எத்தனை கேபினை வேண்டுமானாலும் அதனுடன் இணைத்துக் கொள்ளலாம். 

சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கையில் இருந்தபடியே வாகனத்தை எந்த திசையில் வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும். அதுமட்டுமின்றி ஒரு கேபினில் இருந்து மற்றொரு கேபினில் உள்ளவருடன் ஸ்பீக்கர் மூலம் பேச இயலும். 

இந்த வாகனத்தை உருவாக்கியுள்ள சீனாவை சேர்ந்த யூசென் காய் என்ற 23 வயது இளம் பெண், இதனை வாடகை டாக்சி போன்று உலகம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார். 

சீன இளம் பெண்ணின் இந்த கண்டுபிடிப்பு லண்டனில் ரெனால்ட் நிறுவனம் மற்றும் ஆர்ட்ஸ் இன் லண்டன் பல்கலை கழகம் இணைந்து நடத்திய போட்டியில் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக தேர்வு பெற்றுள்ளது. 


எதிர்காலத்தில் இது ஒரு தவிர்க்கமுடியாத போக்குவரத்து சாதனமாக உருவாகக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.