திங்கள், 7 ஆகஸ்ட், 2023

விரைவில் அறிமுகமாகும் “WhatsApp” இ-மெயில் வெரிஃபிகேஷன் அம்சம்!

 6 8 23

வாட்ஸ் ஆப் செயலியில் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இமெயில் வெரிஃபிகேஷன் அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் செயலியை இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் ஆப்க்கு பயனர்களாக உள்ளார்கள். இந்த வாட்ஸ் ஆப் பிறருடன் தகவல்களை எளிதில் பகிர்ந்துக் கொள்ளவும், பயனர்கள் விரும்பும் பல முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

ஆடியோ, வீடியோ காலிங் வசதி, ஸ்டேட்டஸ் அப்டேட், மெசேஜிங் வசதி, குரூப் சேட் எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

மெட்டா நிறுவனம் பல்வேறு புதிய வசதிகளை பயனர்களின் வசதிக்கு ஏற்ப தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. சமீபத்தில் வாய்ஸ் நோட்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருந்தது. அந்த வகையில் ‘லாக் சாட்’ என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இமெயில் வெரிஃபிகேஷன் என்ற அம்சத்தை வாட்ஸ் ஆப் சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை வாட்ஸ்அப் அப்டேட் சார்ந்த தகவலை வெளியிட்டு வரும் Wabetainfo தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்டா நிறுவனம் அதிகாரபூர்வமாக தகவல் ஏதும் வெளியிடவில்லை.

இமெயில் வெரிஃபிகேஷன் அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்கள் கணக்குகளை மொபைல் எண் இல்லாமல் சரிபார்த்துக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது. இது ஹேக்கர்கள் வசமிருந்து பயனர்கள் தங்கள் கணக்குகளை பாதுகாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த அம்சம் சார்ந்த பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதனை பயனர்கள் ஆப்ஷனலாக பயன்படுத்தலாம் என்றும் தெரிகிறது. விரைவில் இந்த அம்சம் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


source https://news7tamil.live/whatsapp-email-verification-feature-coming-soon.html

Related Posts:

  • NOC (No objection certificate) is not mandatory, before you admit an new advocate to your case? 1. You can change the advocate anytime and at any stage of the proceedings. 2. Procuring NOC is not mandatory but if the advocate is ready to… Read More
  • Hadis நபி(ஸல்) காலத்தில் நோன்புப் பெருநாளில் தொழுகைக்காகப் பாங்கு சொல்லப்பட்டதில்லை; தொழுகைக்குப் பிறகே உரையும் அமைந்திருந்தது.இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தா… Read More
  • மூலிகை மருத்துவம் 1) பொன்மேனி தரும் குப்பைமேனிகுப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும். 2) தேளை விரட்டும் கு… Read More
  • பல் வலி💥 👍👍👍👍👍இயற்கை மூலப்பொருட்கள்: பச்சை மிளகாய்-3,பனங்கல்கண்டு-50கிராம். உபயோகிக்கும் விதம்: பச்சை மிளகாயை நன்றாக அரைக்கவும்,பனங்கல்கண்டு 50கிராம்… Read More
  • காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? சமூக நல்லிணக்கத்தை குலைத்து கலவரத்தைத் தூண்டிய நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? வீரியமிகு போராட்டத்தில் இறங்க நேர… Read More