பள்ளி, கல்லூரிகளில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என கேரளா உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த கல்லூரி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தை நாடியது. இந்த மனுவை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட படிப்பகங்களில் மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமே செல்ல வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், அது படிப்பதற்கான இடமே தவிர போராடும் இடமல்ல எனக் கூறியுள்ள உயர்நீதிமன்றம், மாணவர்களுக்கு ஏதேனும் குறை இருந்தால் அதனை நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடாலம் என அறிவுறுத்தியுள்ளது.
இறுதியாக போராட்டத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்றம், மீறி போராட்டம் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.