மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் வாட்ஸ்அப் தனது பயனர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில் நிறுவனம் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு பயனர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது கியூ ஆர் கோடு மூலம் உங்கள் contact விவரங்களை பகிர்தல், மற்றவர்களுடையே நம்பரை கியூ ஆர் கோடு மூலம் பதிவு செய்தல் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கியூ ஆர் கோடு மூலம் Contact விவரங்கள் பகிர்தல்
முதலில் உங்கள் போனில் வாட்ஸ்அப் ஓபன் செய்து வலப்புறத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்யவும்.
அதில் ‘செட்டிங்க்ஸ்’ கிளிக் செய்யவும்.
இப்போது profile picture பக்கம் சென்று, ‘My code’ செக்ஷன் சென்று கியூ ஆர் கோடு ஐகானை கிளிக் செய்யவும்.
இப்போது அதில் வரும் QR code-யை ஸ்கேன் செய்யலாம் அல்லது ‘Share’ பட்டன் கொடுத்து code-ஐ பகிரலாம்.
குறிப்பு இந்த கியூ ஆர் கோடு உள்ள எவரும் உங்களுக்கு மெசேஜ் அனுப்பலாம். அதனால் கவனமாக பகர வேண்டும். எனினும் இந்த code-ஐ ரீசெட் செய்ய விரும்பினால் அதே பக்கத்தில் உள்ள மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து கியூ ஆர் கோடு பக்கம் சென்று ரீசெட் ஆப்ஷன் கொடுத்து மாற்றலாம்.
கியூ ஆர் கோடு மூலம் Contact Add செய்வது எப்படி?
கியூ ஆர் கோடு பகிர்வதைப் போலவே இந்த செயலையும் செய்யலாம்.
அதற்கு, வாட்ஸ்அப் ஓபன் செய்து ‘செட்டிங்க்ஸ்’ பக்கம் செல்லவும்.
அதேபோல் QR code ஐகானை கிளிக் செய்து ஸ்கேன் code செக்ஷன் செல்லவும்.
இப்போது மற்றவர்களுடையே QR code- ஐ ஸ்கேன் செய்து Contact விவரங்களைப் பெறலாம்.
source https://tamil.indianexpress.com/technology/whatsapps-qr-code-feature-to-share-your-details-or-add-contact-748428/