புதன், 6 செப்டம்பர், 2023

வரும் தேர்தலில் இந்தியா என்றே சொல்லே பாசிச ஆட்சியை விரட்டும்’’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

”வரும் தேர்தலில் இந்தியா என்றே சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்’’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஜி 20 மாநாடு பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசு தலைவர் விருந்தளிக்கிறார். அதற்காக அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த அழைப்பிதழுக்கு எதிர்கட்சியினரிடையே கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

“ பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு  “இந்தியா” என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி.

அவரால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்!“என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


credit https://news7tamil.live/say-india-in-the-coming-elections-and-bjp-will-be-kicked-out-chief-minister-m-k-stalin.html