டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதன் பத்திரிகையில் பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது.
இதற்கு ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தனது எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், “இந்திய நாட்டுக்கான ஒட்டுமொத்த செயல் திட்டத்தையும் ஆர்.எஸ்.எஸ்.தான் இயற்றுகிறதா? எனக் கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பாரத குடியரசுத் தலைவர் என்ற பெயரில் அழைப்பிதழ்கள் வந்து இதுவரை நாங்கள் பார்த்ததில்லை.
பொதுவாக இதுபோன்ற அழைப்பிதழ்கள் எப்போதும் 'இந்திய குடியரசுத் தலைவர்' அல்லது 'இந்திய பிரதமர்' என்று தான் அச்சிடப்படும்.
இப்போது ஏன் இதைச் செய்தார்கள்? இதற்கான உள்நோக்கம் என்ன? இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என சமீபத்தில் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது இந்த அழைப்பிதழை பார்க்கும்போது பல கேள்விகள் எழுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/kanimozhi-questioned-to-why-renamed-bharat