5 9 23
தமிழகம் முழுவதும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி தம்பரம் பிள்ளையின் 152-வது பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை திருஉருவ சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருச்சி லால்குடி அடுத்த அன்பில் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் ஆதாரத்தை பெருக்க போர்வெல் போட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதற்கு மாவட்ட ஆட்சியரை விட்டு சமாதானம் செய்து தான் சரி செய்யப்படும். மாற்று ஏற்பாடு இருந்தால் அந்த மாற்று ஏற்பாடுகளை கட்டாயம் செய்வோம் என கூறியுள்ளார்.
இதனிடையே இந்தியா கூட்டணியில் கூட்டணியில் உள்ளவர்களே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, பதில் அளித்த கே.என்.நேரு அதெல்லாம் ஒரு பேச்சா, விட்டுத்தள்ளு தம்பி என கூறியுள்ளார். பின்னர், உ.பி மாநிலத்தில் உள்ள சாமியார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என சொல்லி இருக்கிறார் என்ற கேள்விக்கு, அவருக்கு அமைச்சர் உதயநிதியே பதில் சொல்லிவிட்டார்.
ரூ.10 கோடி அல்ல பத்து ரூபாய் கொடுத்தால் சீப்பு வாங்கி தலையை சீவிக் கொள்வேன் என்று சொல்லிவிட்டார். சாமியாரால் உதயநிதியின் தலையை சீவ முடியுமா? எங்களுடைய கொள்கை தந்தை பெரியாருடைய கொள்கை. எல்லா மக்களும் சமம் என்ற முறையிலே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நாங்களும் அந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம். அதை எதிர்க்கின்ற கொள்கையை வேர் அறுப்போம்.
28 பேரும் ஒன்றாக இருப்பார்களா, ஆட்சிக்கு வர வேண்டும் என்ற விஷயத்தில் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். கொள்கை மாறுபாடு இருப்பதெல்லாம் என்கிட்ட கேட்கிறீர்களே. திருச்சி மாநகராட்சி சாலையில் முதல் கட்ட சாலை தான் போடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட சாலை போடப்பட்டப்பின் சாலை நன்றாக இருக்கும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் நேருவின் விசுவாசிகள் மாமன்ற உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஜெய்ப்பூர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியாவுடன் சனாதனத்தை ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருப்பது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் மட்டுமல்லாமல் இந்து அமைப்புகளும், சாமியார்களும் கூட எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உதயநிதியின் தலையை வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என உத்தரபிரதேசத்தில் பரமஹன்ச ஆச்சார்யா என்ற ஒரு சாமியார் பகிரங்கமாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-minister-kn-nehru-press-meet-replayed-udhayanithy-head-controversy