ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

சூரியனுக்கு அருகில் பறப்போம்” -ஆதித்யா L1 வெற்றிக்கு ஆனந்த் மஹிந்திரா பாராட்டு!…

 

ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை தொடர்ந்து ஆனந்த் மஹிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார். 

நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையைப் பெற்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, சூரியனைப் பற்றிய ஆய்வுப் பயணத்தை இந்தியா தொடங்கியுள்ளது. அதற்காக இஸ்ரோ உருவாக்கிய ஆதித்யா எல்-1 விண்கலம் காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தொடர்ந்து ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது.

இந்நிலையில்,  ஆதித்யா L1 குறித்து ஒரு சுவாரஸ்யமான இடுகையை X தளத்தில் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். அவர் பதிவில், “‘சூரியனுக்கு மிக அருகில் பறக்க வேண்டாம்’ – இது சூரியனுக்கு அருகில் பறந்த பிறகு கிரேக்க புராணக்கதையான இக்காரஸ் கூறியது. இது அதிகப்படியான லட்சியத்தை வெளிப்படுத்த பயன்படுகிறது. இஸ்ரோவுக்கு நன்றி: ‘சூரியனுக்கு அருகில் பறப்போம்’ என்பது நமது லட்சியங்களை இன்னும் உயர்த்த வேண்டும் என்பதாகும்.” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடந்த லிப்ட் ஆஃப் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

 

 


source https://news7tamil.live/lets-fly-closer-to-the-sun-aditya-praises-anand-mahindra-for-l1-win.html

Related Posts: