திங்கள், 9 அக்டோபர், 2023

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 2400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – மீட்பு பணி தீவிரம்..

 9 10 23

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 400 கடந்துள்ளது

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5.5 ரிக்டர் அளவு கொண்ட பின்னதிர்வு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 5.9, 5.5 மற்றும் 6.3 என்ற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஆறு கிராமங்களில் உள்ள ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 2400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்ட்ட ஜெண்டா ஜன் நகரில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக 12 அவசரகால ஊர்திகளை அனுப்பியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உலக சுகாதார அமைப்பின் குழுவினர் மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆவர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


source https://news7tamil.live/more-than-2400-people-lost-their-lives-in-the-afghanistan-earthquake-rescue-work-intensified.html