Call for agricultural power connection in Villupuram: சூரியசக்தி (சோலார்) மூலம் இயங்கக்கூடிய 7.5 ஹெச்.பி. மோட்டார் பம்பு செட்டுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் எண்ணிக்கையில் விவசாய மின் இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லட்சுமி, “விவசாயிகள் மின் இணைப்பு பெற பதிவு செய்யலாம்” என்று தெரிவித்துள்ளார்.
அவரின் அறிக்கையில், “பிரதம மந்திரியின் குசம் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் முன்னோடி திட்டமாக சூரியசக்தி மூலம் இயங்கக்கூடிய 7.5 ஹெச்.பி. மின்பளு உள்ள மோட்டார் பம்பு செட்டுகளுக்கு மட்டும் தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் எண்ணிக்கையில் விவசாய மின் இணைப்பு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
மேலும், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து மின் தொகுப்பில் ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் விவசாயிக்கு 50 பைசா வீதம் ஊக்கத்தொகை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
விவசாய மின் இணைப்பு வேண்டி தட்கல் திட்டம், சுயநிதி திட்டம் ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் மற்றும் சாதாரண முன்னுரிமை திட்டம் ஆகிய திட்டங்களில் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் பகுதி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்துக்கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/7-5-hp-solar-motor-pump-sets-have-been-approved-in-villupuram-1514404