வியாழன், 10 செப்டம்பர், 2015

உலகின் மிகப் பெரிய மயான பூமி


உலகின் மிகப் பெரிய மயான பூமி - ஏறத்தாழ 60 லட்சம் மனிதர்கள் புதைக்கப்பட்டுள்ளனர்
பிரான்சில் மனித எலும்பு, மண்டை ஓடுகளால் சுவர் போல் அடுக்கப்பட்ட கல்லறை தான் உலகின் மிகப் பெரிய மயான பூமியாக விளங்குகிறது.பிரான்ஸின் தலைநகரான பாரீஸில், டென்ஃபெர்ட் ரொச்செரியோ என்ற இடத்திலேயே இந்த கல்லறை அமைந்துள்ளது, இங்கு ஏறத்தாழ 60 லட்சம் மனிதர்கள் புதைக்கப்பட்டுள்ளனர்.தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்புகளும் மண்டை ஓடுகளும் விறகுபோல சீராக நெருங்க அடுக்கி, சுவர் போல அமைக்கப்பட்டுள்ளது. அந்த அடுக்குகளுக்கு ஊடாக சென்று, பார்வையிட வசதியாக குறுகலான பாதையும் இந்த கல்லறைக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.