வெள்ளி, 18 செப்டம்பர், 2015

முத்துப்பேட்டையில் பதற்றம் ஆரம்பம்...


விநாயகர் ஊர்வலம் என்றாலே ஒரு விதமான பதற்றம் பற்றிக்கொள்கிறது ஆம் அதில் முத்துப்பேட்டை சற்று கூடுதலான பதற்றங்களையும், காவல்துறையின் அடக்கு முறைகளையும் எதிர்கொள்கிறது. பல நாட்களுக்கு முன்னதாக எல்லா தரப்பு முக்கியஸ்தர்களையும் அழைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடக்கும். அதில் ஊர்வலத்தை முன்னின்று நடத்தும் ஹிந்துத்துவாக்கள் பல உத்திரவாதங்களை எழுத்து மூலமாக வழங்குவார்கள். ஆனால் ஊர்வலத்தன்று அனைத்தும் மீறல்களும் அரங்கேற்றப்படும்.
தென் மண்டல ஐ.ஜி தலமையில் 5 மாவட்ட எஸ்.பிக்கள் வழிநடத்தலில் பல்வேறு டி.எஸ்.பிக்கள் முன்னிலையில், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் நூற்றுகனக்கிலும், 3000 க்கும் மேற்பட்ட காவலர்களும், களம் இறக்கப்படுவார்கள், மக்களை மிரட்டும் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் என பாதுகாப்புக்கு நிருப்பத்தப்படும்.
ஊர்வலம் செல்லும் ஊரின் பிரதான முக்கிய சாலைகளை இணைக்கும் முஸ்லிம் பகுதிகளின் அனைத்து சிறு வழிகள் மட்டும் பெரிய பெரிய இரும்பு தட்டிகள் வைத்தும், பெரிய பெரிய மரங்கள் கொண்டும் அடைக்கப்படும். இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளவுவார்கள்....
ஒவ்வொரு 10 அடிக்கு 5 அல்லது 10 காவலர்கள் வீதம் நிறுத்தபடுவார்கள், முஸ்லிம்களின் வழிபாட்டுதலங்களில் 20 க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்படுவார்கள், தொழுகைக்கு வருபர்வர்கள் தொழுகை முடிந்தவுடன் சென்றுவிட வேண்டும் பள்ளிவாசலில் அமர்ந்தாலோ, நின்றுகொண்டு உரவாடிக்கொண்டாலோ காவல்துறை மிரட்டலில் இறங்கும், ஊர் முழுவதும் அதி நவீன கேமாராக்கள் கொண்டு டவர்கள் அமைத்து கண்காணிக்கப்படும். சாலைகளிலோ, வியாபர தளங்களிலோ இரண்டு நபர்களுக்கு மேல் இருக்க கூடாது.
இப்படி அனைத்து அன்றாட வாழ்க்கை முறைகளையும் நசுக்கி பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு பக்கம் அத்து மீறும் காவல்துறை.
இத்தனை அடக்குமுறைகளிலும் மக்கள் சகித்துக்கொண்டு எப்படியாவது அமைதியான முறையில் விநாயகர் ஊர்வலம் நடந்துவிடாதா என்று முஸ்லிம்கள் உள்ளிட்ட தொப்புள்கொடி உறவுகளும் வேண்டிக்கொண்டு இருக்கும் தருணத்தில்தான். ஊர்வல தேதி வந்துவிடும்.
ஊர்வலம் 2 மணிக்கே புறப்பட்டுவிடுவோம் என்று எழுதிகொடுத்தும் 4 மணிக்கு தான் புறப்படுவார்கள். வரும் வழிகளில் எல்லாம் அத்துமீறிய வாகங்களை உபோயப்படுத்திகொண்டெ வருவார்கள். பள்ளிவாசல்களை கண்டாலோ அல்லது முஸ்லிம்களின் பகுதிகளை கண்டாலோ அவர்களுக்கு எப்படி வரும் என்று தெரியவில்லை கேவலமான செயல்களில் ஈடுபடுவார்கள்.
பத்துக்காசு முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு, ஓடு ஓடு பாகிஸ்தானுக்கு ஓடு, துலுக்கனை வெட்டு துலுக்கச்சியை கட்டு, ஓம் காளி ஜெய் காளி முஸ்லிம்கள் காலி, இந்தியா இந்து நாடு முஸ்லிம்களே பாகிஸ்தானுக்கு ஓடு, போன்ற இன்னபிற கோசங்களையும் அருவருக்கத்தக்க செயல்களிலும் ஊர்வலத்தினர் ஈடுபடுவார்கள்.
கடும் வார்த்தைகளை கொண்டு முஸ்லிம்களின் வீடுகள் கல் எரிந்து தாக்கப்படும், முஸ்லிம் நிறுவனங்களும் குறிவைக்கப்படும். இவை அனைத்தையும் காவல்துறை வேடிக்கை பார்த்தவாறே ஊர்வலத்தினரை நகர்த்தி கொண்டு செல்வார்கள்.
பதிக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல்நிலையம் சென்று வழக்கு கொடுத்தால் அது பெயரளவில் பதியப்பட்டு கிடப்பில் போடப்படும் இது வருடம் தோறும் அரங்கேறும் அவலங்கள். என்ன செய்ய இந்தியாவில் சிறுபான்மையாக வாழ்வது அதிலும் முஸ்லிம்களாக வாழ்வது பரிதாபகரமே...!!!!
- முத்துப்பேட்டை முகைதீன்