திருநெல்வேலி மாவட்டம் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பெயர் எடுத்த மாவட்டம் என்பதால் நெல்லை மாவட்டத்தில் எப்படியாவது இந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த இந்துத்துவா பயங்கரவாதிகள் தொடர்ந்து பல்வேறு சதிசெயல்களில் இறங்கி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு செய்யப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் மீது வேண்டுமென்றே 25 க்கும் அதிகமான போஸ்டர்களை ஒட்டி மதக்கலவரத்தை உருவாக்க திட்டமிட்டு சிவசேனா கட்சியினர் இன்று கைது செய்யப்பட்டனர்.
அந்த விரக்தியின் காரணமாக நெல்லை கிழக்கு டவுண் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு முன்பு இந்தியாவின் 4 முறை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான RSS கொடியை கட்டி பதற்றத்தை ஏற்படுத்தினர்.
இதனால் அப்பகுதி மக்கள் கூடி RSS கொடியை அவிழ்க்க கூறினர். அதற்கு RSS பயங்கரவாதிகள் நாங்கள் கொடியை அவிழ்க்க மாட்டோம், இது எங்கள் நாடு, நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று தகராறில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த அப்பகுதி TNTJ நிர்வாகிகள் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் இந்துத்துவ தீவிரவாத கொடியான RSS கொடியை அவிழ்த்து எறிந்தனர்.
அதன்பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.
தகவல் உதவி : சையது ராசிக்
