திங்கள், 21 செப்டம்பர், 2015

பள்ளிவாசல் மீது கல்லெரிந்து இந்துமுன்னனி அராஜகம்

பழனியில் விநாயகர் ஊர்வலத்தின் போது பள்ளிவாசல் மீது கல்லெரிந்து இந்துமுன்னனி அராஜகம்
பழனியில் இன்று இந்துமுன்னனி மற்றும் VHP சார்பில் விநாயகர் ஊர்வலம் நடத்தப்பட்டது
பழனிகாந்திரோட்டில் உள்ள சின்னப்பள்ளிவாசலில் மகரிப் தொழுகை நடந்துகொண்டிருந்த போது ஊர்வலம் பள்ளிவாசல் அருகே வந்துகொண்டிருந்தது தொழுகையை முடித்துவிட்டு முஸ்லிம்கள் வெளியேவந்தபோது ஊர்வலத்தில் 46 வது வாகனமாகவந்த நம்பர் பிளேட் இல்லாத டிராக்டரில் வந்த இந்துமுன்னனியினர் கற்களை பள்ளிவாசலின் மீது வீசினர்
இதில் தமுமுக பழனிநகர செயலாலர் சேக்பரித் மீது கல் விழுந்து வலது கண்புருவத்தில் லேசான காயம் ஏற்பட்டது
PFI நிர்வாகிகளுக்கும் லேசான காயம் ஏற்ப்பட்டது
பிறகு காவல்துறை முஸ்லிம்களை பள்ளிவாசலின் உள்ளே அனுப்பி கதவுகளை அடைத்தனர்
இதனால் பழனிபகுதி முழுவதும் பதட்டம் தொற்றியது
தகவல் கிடைத்து பழனிபகுதியில் உள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் மக்கள் சின்னபள்ளிவாசல் முன்பு குவியத்தொடங்கினார்கள்
இதனைதொடர்ந்து பழனி ஜமாத்நிர்வாகிகள் தமுமுகமாவட்ட,நகர நிர்வாகிகள் மற்றும் PFI நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
அப்போது அங்குவந்த காவல்துறை அதிகாரிகள் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பாத வாக்குறுதி கொடுத்துள்ளார்கள்
கடந்த ஆண்டு விநாயர்ஊர்வலத்தின்போது விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த இருவர்கள் கொலைசெய்யப்பட்டார்கள் இதைகாரணம் காட்டி விநாகர் ஊர்வலத்திற்கு பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க கடுமையான நிபந்தனைகள் விதிக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகளின் சார்பில் பழனிநகர செயலாளர் சகோதரர் பொதினிவளவன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 27 நிபந்தனைகளை விதித்து உத்திரவுபிறப்பித்தது
அதில் காலை பத்து மணிக்கு ஊர்வலத்தை துவங்கி மாலை 6 மணிக்குள் முடித்துவிடவேண்டும்
மேடை அமைக்க கூடாது
கண்டணத்திற்குரிய கோஷங்கள் போடக்கூடாது என பல்வேறு நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்தும் எந்த நிபந்தனைகளையும்பின்பற்றாமல் இரவு 7.25 மணிக்கு பள்ளிவாசல் மீது கல்லெரிந்துள்ளார்கள்
நீதிமன்ற உத்திரவுகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது
இன்னும் தொடர்ந்து மூன்று நாட்கள் விநாயகர் ஊர்வலம் நடைபெறவுள்ளது
முஸ்லிம்கள் பொறுமையாக இருக்கவும்
காவல்துறை என்ன நடவடிக்கைகள் எடுக்கிறதுஎன்று பார்போம்
நாளை நீதிமன்ற உத்திரவு பின்பற்ற படவில்லை என்றால்......
பழனி சின்னப்பள்ளிவாசல் வளாகத்தில் தமுமுக உள்ளிட்ட சமுதாய அமைப்புகள் முஸ்லிம்களை திரட்டும் என்பதையும் சொல்லிஇருக்கிறோம் .
காவல்துறை நடவடிக்கை எடுக்குமா ?
நாளை பார்போம் .
தகவல் சகோதரர் ‪#‎Palani_farook‬