செவ்வாய், 29 செப்டம்பர், 2015

சித்தன்னவாசலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கண்ணாமலைப்பட்டி அருகில் உள்ள சுற்றுலா மையமான சித்தன்னவாசலில் ஞாயிற்றுக்கிழமை உலக சுற்றுலா தினத்தையொட்டி, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.
திருச்சியிலிருந்து 60 கி.மீ, புதுக்கோட்டையிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது சித்தன்னவாசல். சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், பசுமையான புல்தரைகள், நீரூற்றுகள், படகு குழாம் என சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த சுற்றுலா மையத்தை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையினர் பராமரித்து வருகின்றனர். நூழைவு கட்டணம் ரூ. 10-ம், மிதிப்படகு கட்டணம் 10-ம், துடுப்பு படகு 20-ம், செயற்கை நீரூற்றுகளை கண்டுகளிக்க நபர் ஒன்றுக்கு ரு. 50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அதோடு, இங்குள்ள குகை கோயிலான சமணர் படுக்கைகள், பழங்கால தமிழ் பிராமி கல்வெட்டு, ஓவியங்கள்(படகாட்சியகம்) உள்ளிட்டவைகளை மத்திய அரசின் தெல்லியல் துறையினரும் பராமரித்து வருகின்றனர்.
சமணர் படுக்கை, தமிழ்பிராமி கல்வெட்டு, ஓவியங்களை காண்பதற்கு, 2 நுழைவு வாயிலுக்கும் ரூ. 10 வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு உலக சுற்றுலா தினம் ஞாயிற்றுக்கிழமை (செப். 27) கொண்டாடப்பட்டதையொட்டி, அன்று ஒருநாள் மட்டும் சுற்றுலா பயணிகள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.
பள்ளி விடுமுறை நாள்கள், கோடை விடுமுறை, விநாயகர் சதுர்த்தி, ஆடி 18, தெலுங்கு வருட பிறப்பு, ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரீத் போன்ற விழாக் காலங்களில் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்துக்கு பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது

thanks to : 
முக்கண்ணாமலைப்பட்டி பக்கம்