கடந்த 23.05.15 அன்று இறைச்சி அதிகம் விற்பனை ஆகும் நாட்களில் ஒன்றான சனிக்கிழமை காலை 6.30 மணிக்கே சிவகாசி முஸ்லிம் தெருக்களில் உள்ள மாட்டிறைச்சி கடைக்களுக்கு எப்போதும் விளம்பர மோகத்தை தேடும் மனித மிருக அமைப்பான ப்ளூ கிராஸ் என்னும் அமைப்பை சார்ந்த சுனிதா என்ற பெண்,
நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் கூடி கலைந்தாலும் அது முஸ்லிம்கள் என்றால் அந்த செய்தியைக்கூட பத்திரிக்கையில் வரவிடாமல் தடுப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ள சில பத்திரிகையாளர்களை வீடியோ கேமராவுடன் அழைத்து வந்து,
பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இவ்வாறு கறிக்கடை நடத்துகிறீர்களா என்று படம்பிடித்து விட்டு நேராக சிவகாசி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் முஸ்லிம் தெருக்களில் என்ன கொடுமை நடக்கிறது பாருங்கள் என்று எடுத்த வீடியோவை போட்டு காண்பித்து அதனை தடுக்க வாருங்கள் என்றும்
அந்த இறைச்சி கடைக்காரர்களின் தொழுவங்களில் தற்போது கட்டி இருக்கும் மாடுகளை அவிழ்த்து என்னிடம் ஒப்படைக்கும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது அந்த இரண்டு கால் மிருகம்.
அந்த விலங்கை பற்றி ஏற்கனவே நன்கு அறிந்து இருந்த நகராட்சி அலுவலகம்,
சேர்மன் தற்போது இல்லை பிறகு வருமாறு கூறியுள்ளனர்.
அதனை கூட பொறுமை காக்க முடியாத அந்த மிருகம் அருகாமையிலேயே உள்ள நகர் காவல் நிலையத்திற்கு சென்று உடனடியாக இருக்க கூடிய மாடுகளை தன்வசம் கொடுக்கும் படியும் தெருக்களில் இதுபோன்று இறைச்சி கடை செயல்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் படியும் புகார் கொடுத்துள்ளது.
இதனை அறிந்த இறைச்சி கடைக்காரர்கள் சிவகாசி TNTJ வை தொடர்பு கொண்டனர் பின்னர் களத்தில் இறங்கியது நமது ஜமாஅத்!
அப்போது தான் இந்த இரண்டு கால் மிருகத்தின் இன்னொரு பக்கம் நமக்கு தெரிய வந்தது என்னவெனில்,
வாய் இல்லாத ஜீவன்களுக்காக அமைப்பும் நடத்தும் இந்த இரண்டு கால் மிருகம் அந்த ஜீவன்களுக்கு வாய்க்கு ருசியாக சாப்பிடுவதற்கு மாட்டிறைச்சியை தான் கொடுத்துள்ளது. இதனை சிவகாசி முஸ்லிம் தெருக்களில் உள்ள கறிகடைகளில் அதற்கான பணத்தை கொடுத்து வாங்காமல் கடனுக்கு வாங்கிச்சென்று ஒவ்வொரு கடைகளிலும் தலா ₹2000 க்கு மேல் பாக்கி உள்ளது தெரிய வந்தது.
அதோடு மட்டும் இல்லாமல் மதுரை மாவட்டம் மேலூரில் மாட்டுச் சந்தை உள்ள நாட்களில் இந்த இரண்டு கால் மிருகத்துக்கு படு கொண்டாட்டம் தான்! இறைச்சி கடைக்காரர்கள் விலை பேசி வாங்கி வரும் மாடுகளை வழியிலேயே தடுத்து நிறுத்தி,
மாடுகளை இவ்வாறு வாகனங்களில் கொண்டு வருவதற்கு உரிய கால்நடை மருத்துவரின் சான்றிதழ் உள்ளதா? எனக்கேட்டு மிரட்டி பின்னர்,
இதனை காவல் நிலையத்துக்கு நான் கொண்டு சென்றால் அனைத்து மாடுகளும் எனக்குரியதாகி விடும் என்று கூறி பல ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்யும் வேலையும் இந்த ஜீவராசிக்கு கைவந்த கலை!
இந்த தகவல்களை எல்லாம் சேகரித்து நேராக காவல் நிலையத்திற்கு சென்று அங்கே அமர்ந்திருந்த அந்த ஜீவராசியிடம் இதனையெல்லாம் இங்கு இருக்ககூடிய இறைச்சி கடைக்காரர்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
காலை 6.30 மணியிலிருந்து மாலை 3.30 மணிவரை எப்படியாவது ஏதாவது ஒரு வழியில் எதனையாவது கரந்து விடலாம் என்ற நப்பாசையில் அமர்ந்திருந்த அந்த இரண்டு கால் மிருகம் ஓட்டம் பிடித்து விட்டது.
உடனடியாக சிவகாசி கிளை நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இறைச்சி கடைக்காரர்களையும் கூட்டிக்கொண்டு விருதுநகர் மாவட்ட கலெக்டரை மாலை 5மணிக்கே சந்திக்க சென்று விட்டது.
கலெக்டர் சொன்னதை கேட்டு நமக்கு மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால்,
ப்ளூ கிராஸ் என்பது கால்நடைகளை சரியான முறையில் பராமரிக்காமலும், அதற்கான உணவும் சரிவர கொடுக்காமல் துன்புறுத்தினால் மட்டுமே அதனை நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர அவர்களுக்கு அனுமதி உள்ளதே தவிர,
மனிதனின் உணவுக்காக அதனை அறுத்து சாப்பிடுவதை தடுப்பதற்கு அவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை தெளிவான முறையில் நம் முன்னிலையில் இறைச்சி கடைக்காரர்களிடம் எடுத்து கூறினார்.
இனி இதுபோல் அந்த அமைப்பினர் வந்து மனித உணவுக்காக அறுக்ககூடாது என்று கூறினால் அருகாமையில் உள்ள காவல்நிலையத்தில் அவர்கள் மீது புகார் கொடுங்கள் என்ற ஆலோசனைகளையும் கலெக்டர் கூறினார்.
தற்போது இது தொடர்பாக அமைதி காத்து வந்த இந்த அமைப்பை சார்ந்த சுனிதா என்ற பெண் முஸ்லிம்களின் தியாக பெருநாளான ஹஜ் பெருநாளை பயன்படுத்தி மாடுகளை கைப்பற்றி பணத்தை கரக்கும் வேலையில் இறங்கியுள்ளார்.
இந்த அமைப்பை சார்நதவர்களிடம் இருந்து முஸ்லிம் சமுதாயம் தெளிவாக இருக்க வேண்டும்!
காவல்துறையும் இதுபோன்றவர்களின் நடவடிக்கைக்கு செவி சாய்க்காமல் சட்டத்தில் உள்ளதை உள்ளபடி நடைமுறை படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சட்டத்திற்கு மாற்றமாகவும் எங்களின் மார்க்க கடமையை செய்வதற்கு தடையாக இருக்கும் பட்சத்தில் அதனை உரிய முறையில் இந்த சமுதாயம் எதிர் கொள்ளும் என்ற தகவலையும் எமது நண்பர்களான காவல்துறைக்கு தெரிவிக்கிறோம்!