திங்கள், 21 செப்டம்பர், 2015

ஏன் ISIS ஐ கட்டுப் படுத்த முடியவில்லை?

மத்திய கிழக்கில் ஒருபோதும் இல்லாத அளவு பெரும் சண்டை மூண்டுள்ளதை இந் நாட்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. இரத்தக் கலரியாக மாறியுள்ள ஷாம் தேசத்தின் எதிர் காலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன் அங்கே ISIS இன் கரம் பலமாக ஓங்கி வருகின்ற ஒரு போக்கினை காணக் கூடியதாக இருக்கின்றது. ஏன்? எதற்காக?
(ஈராக்கில், லெபனானில், எகிப்தில், லிபியாவில்) ஆப்கானில், பல ஆபிரிக்க நாடுகளில் பல தடவைகள் சண்டைகள் மூண்டு லட்சக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டு, அகதிகளாக்கப்பட்ட போதெல்லாம் மேற்கத்தியம் சில பொருளாதார உதவிகளைச் செய்ததே தவிர ஒருபோதும் மக்களுக்காக தமது நாட்டுக் கதவுகளைத் திறந்து விடவும் இல்லை, லட்சக் கணக்கான அகதிகளை உள்வாங்கவும் இல்லை. தற்போது ஷாமில் இருந்து வெளிக் கிளம்பியுள்ளோர் மட்டும் மில்லியன் கணக்கான அகதிகளாக ஐரோப்பாவுக்குள் குடியேறிக் கொண்டிருக்கின்றார்கள். எங்கிருந்து இந்த திடீர் பாசம் பொங்கி எழுந்துள்ளது? ஏன்? எதற்காக?
ஆம் லட்சக்கணக்கான அகதிகள் ஐரோப்பாவால் உள்வாங்கப் பட்டுக் கொண்டிருக்க அங்கே ஷாம் தேசத்து நிலங்கள் காலியாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன . ஏன்? எதற்காக?
சென்ற காலங்களில் அமெரிக்காவும் மேற்கத்தியமும் பல மத்திய கிழக்கு நாடுகளில் ஆயுதக் கலாச்சாரம் பெருகி வருவதாகவும் அது உலகிற்கு (இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும்) பாரிய அச்சுறுத்தல் என்று கூப்பாடு போட்டுக் கொண்டும் குறித்த நாடுகளை துவம்சம் செய்தன. எனினும் இன்று சிரியாவின் பெரும் நிலப்பரப்பையும் ஈராக்கின் ஒரு பகுதி நிலத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு லெபனானே தமது அடுத்த இலக்கு எனும் கோஷத்துடன் இஸ்ரேல் நிலத்தின் பக்கம் நெருங்கி வந்துகொண்டிருக்கின்ற ISIS இனால் இஸ்ரேலுக்கும் அதன் தோழமை நாடுகளுக்கும் எவ்வளவு பயங்கர அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை யார்தான் மறுக்க முடியும்? எனினும் இஸ்ரேல் அதனை கண்டுகொள்வதாகவே இல்லை . ஏன்? எதற்காக?
ISIS ஐ அடக்குவதற்காக கிளம்பியிருப்பதாக பீத்திக் கொள்ளும் அமெரிக்க கூட்டுப் படைகளால் ஏன் ISIS ஐ கட்டுப் படுத்த முடியவில்லை? ஆப்கானிலும் இதர பகுதிகளிலும் உள்ள பதுங்குக் குழிகளையும், பங்கர்களையும், ஆயுதக் கிடங்குகளையும் உடனுக்குடன் போட்டோ பிடித்து உலகுக்கு காண்பித்த இவர்களால் ஏன் ISIS இன் ஒரு ஆயுதக் களஞ்சியத்தை கூட போட்டோ பிடித்தேனும் காண்பிக்க முடியவில்லை? ISIS இற்கு எதிரானவர்கள் என உலகை நம்பவைப்பதற்காகவே குறித்த கூட்டுப்படை அங்கே காலம் கடத்திக் கொண்டிருக்கின்றது. அப்படியாயின் இவை அனைத்தும் ஏன்? எதற்காக?
ஆம் இஸ்ரேலுக்கான அகண்ட பூமி ISIS இனால் தயார் படுத்தப்பட்டு வருகின்றது? 

Related Posts: