செவ்வாய், 22 செப்டம்பர், 2015

இறுதி நாளின் அடையாளமாக- வயதான குழந்தை

வட மாநிலத்தில் வயதான தோற்றம் உள்ள குழந்தை.
(இறுதி நாளின் அடையாளமாக, வயதான குழந்தை நம் இந்தியாவின் வட மாநிலத்தில் பிறந்துள்ளது. குர்ஆன் சூரா இ முஜாமில் (17 ஆவது ஆயத்தில்) குறிப்பிடப் பட்டுள்ளதை போல, வயதான ஏழை குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதனுடைய இரத்த மாதிரியை ஆய்வு செய்ததில் அதன் வயது 105 ஆகும்.)
இப்படி ஒரு செய்தி காட்டு தீ போல் பரவுகிறது.
ஆனால் இந்த செய்திக்கும் கியாமத் நாளின் அடையாளத்திற்கும் சம்பந்தமில்லை.அந்த குர்ஆன் வசனத்தை ஆராயும் போது கூட தெளிவாக இந்த செய்திக்கும் கியாமத் நாளிற்கும் சம்பந்தமில்லை என்று தெரிகிறது.
فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا
எனவே, நீங்கள் நிராகரித்தீர்களானால், குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் அந்த நாளிலிருந்து எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள்.
(அல்குர்ஆன் : 73:17)
👆🏿
இது தான் அந்த வசனம்.
அதில்...
குழந்தைகளையும் நரைத்தவர்களாக்கும் ""அந்த நாளிலிருந்து"" எவ்வாறு தப்பிக்க போகிறீர்கள் என்று வருகிறது.
" அந்த நாளை " ஏன் "இந்த நாளாக" ஆக்குகிறார்கள்.
எனவே குர்ஆன் வசனம் தெளிவாக சொன்னது போல் இந்த குழந்தை கியாமத் நாளில் அடையாளமான குழந்தை அல்ல..
இது விட்டமீன் குறைப்பாட்டால் தோல் வியாதி தான்.
என்பதை பற்றிய மருத்துவர்களின் அறிக்கை அந்த லிங்கில் உள்ளது.
இது குறைபாட்டுடன் பிறந்த குழந்தையே தவிர இதுக்கும் இஸ்லாத்திற்க்கும் சமூகத்திற்க்கும் எவ்வித சம்மதமும் இல்லை.