வெள்ளி, 18 செப்டம்பர், 2015

மனித இனத்தையே காக்கும் காடுகள்

நாம் சுவாசிக்கும் பிராணவாயுவைத் தருவது காடுகள். அதுமட்டுமில்லை, தூசுகள், கரியமில வாயு மற்றும் ஆபத்தான துகள்களை உள் வாங்கிக் கொண்டு காற்றைச் சுத்தம் செய்யும் ஒரு தொழிற்சாலை போல் இயங்குகின்றன.
உதிர்ந்த இலை, தழைகள் மற்றும் வேர்கள் மழைநீரை ஓடவிடாமல் உறிஞ்சிக் கொள்வதும் காடுகள்தான். இதனால் நிலச்சரிவுகள் தடுக்கப்படுகிறது. நிலத்தடியில் நீர் சேமித்து வைக்கப்படுகிறது. ஆறுகளுக்கும், ஏரிகளுக்கும் தண்ணீரை அனுப்புகிறது. பறவைகளைப் பாதுகாக்க பறவைகள் சரணாலயம், மிருகங்களைப் பாதுகாக்க உயிரியல் பூங்காக்கள் போன்றே மரங்களைப் பாதுகாப்பது காடுகள். சொல்லப்போனால் மனித இனத்தையே காப்பதும் காடுகள்தான்.
காடுகளே நீங்கள், 'எவ்ளோ' நல்லவர்கள்!